fbpx

ஒழுக்கம் தவறாமல் இருக்க ஆன்மீக பயிற்சி அவசியம்!- நிறைவு விழாவில் காவல்துறை டிஐஜி அறிவுரை!

மார்ச் 5, 2019 – ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்”  என்ற தொடர் வகுப்பை   ஜனவரி முதல் மார்ச் 2019 வரை  பல பகுதிகளாக இஸ்கான் நடத்தியது.   முதலாமாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த பயிற்சிக்கான வகுப்புகள்,  மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் மையங்களின் மூத்த யோகாசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ்  நடைபெற்றன.

அண்மையில் இதன் நிறைவு விழா மார்ச் 5, 2019 அன்று நடைபெற்றது.  மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறை ஈஐஎ திரு. பிரதீப் குமார் ஐககு அவர்கள் தலைமை தாங்கி பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.  இதில் அவர், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் உயர்ந்த நோக்கத்திற்காக   மிகுந்த ஆற்றலுடன் செயலாற்ற வேண்டும்.   அதே சமயத்தில் நற்குணங்களையும் பேண வேண்டும். ஏனென்றால்  உயர்ந்த நிலையில் இருக்கும் பலர் தங்கள்   ஒழுக்கத்தை தவற விட்டதால்,  அந்த உயர்ந்த மதிப்பை இழந்து விடுகின்றனர். எனவே நல்ஒழுக்கமே நம்மை எல்லா சூழ்நிலையிலும் காக்கும். அப்படி இந்த ஒழுக்கத்தை தவற விடாமல் இருப்பதற்கு நீங்கள் இந்த வகுப்புகளில் கற்றுக் கொண்ட ஆன்மீக பயிற்சிகளை தினமும் பயிற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து இஸ்கான் தென் மண்டல செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் பேசுகையில், நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகளில் கற்றுக் கொண்டதை தொடர்ந்து பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  கல்லூரி முதல்வர் திரு.ஹரி கிருஷ்ணன்,  திருமதி. விஜயா ஈஞுஞுண (கீஈ) மற்றும் பேராசிரியர் திரு. ரவிகுமார் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக பங்கேற்ற மாணவர்கள் பலரும் இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து தங்கள் கருத்துக்களை வழங்கினர். இவற்றில் சில. . .

பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த மாதிரியான பயிற்சி வகுப்புகள் மிகவும் அவசியம்.   மேலும் பல வகுப்புகள் நடத்தினால் நல்லது.

– எஸ்.நித்யஸ்ரீ சிஎஸ்இ

மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகுப்பாக இருந்தது.   இஸ்கான் யோகா ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்தவிதம் நன்றாக இருந்தது.

– இ.எஸ்.சூர்ய கார்த்திக், சிஎஸ்இ

நன்னடத்தை பற்றிய வகுப்புகள் அனைத்தும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.

–  ஆர்.இளமாறன், சிவில்

இஸ்கான் நடத்திய இந்த வகுப்புகள், அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. எனது சந்தேகங்களும் தெளிவானது.  மேலும் பல வகுப்புகள் இது போல் நடத்த வேண்டுகிறேன்.

– எம்.வைஷ்ணக பிரியா, இசிஇ

குறிப்பாக மனஅழுத்தம் பற்றிய வகுப்பும், உணவு பழக்க வழக்கம் பற்றிய வகுப்பும் மிகவும் நன்றாக இருந்தது.

– எஸ்.டி.பிரவீன், பி.டெக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *