ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி சேவா

ஹரே கிருஷ்ணா.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு
ஸ்ரீகிருஷ்ண  சேவைகளில் பங்கேற்று
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்
விசேஷ திருவருள் பெற விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட  லிங்கில் சென்று
நன்கொடை செலுத்தலாம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடை இஸ்கான் ஆற்றும் கீழ்கண்ட அனைத்து சேவைகளுக்கும், மிகவும் உறுதுணையாக இருக்கும். தங்கள் குடும்பம் முழுவதிற்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருள் கிடைக்கும். நன்றி ஹரே கிருஷ்ணா!
  • தினசரி பூஜைகள், நைவேத்யங்கள்
  • பிரசாத அன்னதானம்
  • மந்திர தியானம், யோகா வகுப்புகள்
  • பகவத்கீதை புத்தக விநியோகம்
  • இல்லங்களில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள்
  • கிராமங்களில் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
  • பள்ளி, கல்லூரிகளில் மாணவர் நல நிகழ்ச்சிகள்
  • ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள்
  • மற்றும் பல…

 – ISKCON Madurai, Tirunelveli, Periyakulam
 Ph/Whatsapp:  ☎️ 721 721 6001

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பற்றிய விழா விபரங்கள் கீழே உள்ளது!

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா
செப்டம்பர் 6 -7, 2023 (புதன், வியாழன் )

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது இஸ்கான்.
இந்த வருடம் 2023, இரண்டு நாட்கள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 6ம் தேதி தமிழக முறைப்படியும், செப்டம்பர் 7ம் தேதி கிருஷ்ணர் அவதரித்த ஸ்தலமான மதுரா நகர முறைப்படியும் விழாக்கள் நடைபெற உள்ளன. (முழுமையான விபரங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலை தொடர்பு கொள்ளவும்)
மதுரை, திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் (புதன், வியாழன்) இரண்டு நாட்களும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பெரியகுளம் இஸ்கான் ஸ்ரீஜெகன்னாதர் திருக்கோயிலில் செப்டம்பர் 6ம் தேதி
(காலை 7.30 முதல் மதியம் 1 மணி வரை) விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பதும், ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்து ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதும் அவசியமானதாகும்.

விரதம் இருக்கும் பக்தர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி வியாழன் அன்று கடைபிடிப்பது சிறப்பிற்குரியதாகும்.


ஸ்ரீகிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள், மஹா அபிஷேகம், நைவேத்தியங்கள், ஜெயந்தி உற்சவ சிறப்பு அலங்காரம் உட்பட பல விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும்.