மார்ச் 13, 2019 – மதுரை தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மந்திரா மெடிட்டேஷன் குறித்த அறிமுக வகுப்பை இஸ்கான் நடத்தியது.
தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்பில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இஸ்கான் தென் தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் அவர், தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட ஒரே வழி நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதேயாகும். ‘உயர் சுவையே தாழ்ந்த சுவையை விரட்டியடிக்க ஒரே வழி’ என்று பகவத்கீதை பதம் 2.59ல் பகவான் கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். மேலும் ஹரே கிருஷ்ண மந்திர தியானத்தில் கிடைக்கும் உயர் சுவையால், தவறான பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடந்த மேலை நாட்டினர் அன்றும், இன்றும் பக்குவம் அடைந்தவர்களாய் விளங்குவதே இதற்கு நடைமுறைச் சான்று” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பங்கேற்ற மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.சரஸ்வதி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள். ஏற்பாடுகளை ககூகீ பொறியியல் கல்லூரி துணைப் பேராசிரியர் திரு.குபேந்திரன் செய்திருந்தார்.