பிப்ரவரி 14, 2019 – சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ ஞுஞீடிணாச்ணாடிணிண) என்ற சிறப்பு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது.
மதிப்பிற்குரிய நீதிபதி திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், உலகம் முழுவதும், நீதித்துறை உட்பட அனைத்திலும் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இஸ்கானின் தென் தமிழகச் மண்டலச் செயலாளரும், இஸ்கான் இந்தியாவின் டிரஸ்டிகளில் ஒருவருமான திரு.சங்கதாரி பிரபு அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்புரையை வழங்கினார்.
இதில் அவர், மன அழுத்தம் குறைய பல தீர்வுகள் கூறப்பட்டிருந்தாலும், மன அழுத்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கும் எளிய தீர்வு, புலன்களுக்கு உயர் சுவை அளித்து அதன் மூலம் மன அழுத்தத்தின் கடுமையைத் தணிக்கலாம் என்பதே. பகவத் கீதையிலும் (பதம் 2.59) இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் பகவான் நாமத்தை உச்சரிப்பதன் மூலம் இந்த உயர் சுவை சாத்தியமாகிறது. அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான வழியாகும் இது” என்று குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிறைவாக வழங்கப்பட்ட நன்றியுரையில் சங்கத் தலைவர் திரு.கோடீஸ்வரன் அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.