fbpx

பிரதமர் வாழ்த்துரை…

ஆகஸ்ட் 16, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார்.

இதில் அவர் குறிப்பிட்டதாவது;

மங்களகரமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீகிருஷ்ணரின் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.

ஸ்ரீகிருஷ்ணரின் செய்தி, ஞானம், தெய்வீக தத்துவத்தைப் பரப்புவதில் இஸ்கான் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இஸ்கானின் அங்கத்தினர்கள் இறைத்தொண்டு மற்றும் மனிதநலத் தொண்டு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த வகையில், பல மனித நேய நலத் தொண்டுகள் மூலமாக மனிதகுலத்திற்கு தொண்டாற்றி வருகின்றனர்.

அமைதி, எல்லையற்ற ஆன்மீக அன்பு மற்றும் ஆனந்தம் ஆகியவற்றிற்கான ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் காலவரம்பற்றது, பிரபஞ்சம் முழுமைக்குமானது. பலன்களில் பற்றின்றி கடமைகளை செய்ய வேண்டும் என்ற மனித குலத்திற்கான ஸ்ரீகிருஷ்ணரின் உயர்ந்த உபதேசம் தற்காலத்திற்கும் கூட மிகவும் பொருத்தமானதாகும்.

ஸ்ரீமத் பகவத்கீதையின் ஆன்மீக ஒளியான பராம்பரிய கலாச்சாரம் எங்கும் எதிரொலிக்கப்பட்டுள்ளது. பகவத்கீதையின் ஆழ்ந்த ஞானம் மற்றும் வழிகாட்டல்களில் இருந்து, முழுமொத்த மனித சமுதாயமும் பயனடைய உதவுவதில் ‘இஸ்கான்’ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டு செயலாற்றுவது என்பதை பகவத்கீதை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலுக்கும் தீர்வைக் கொண்ட விரிவான கையேடும் மற்றும் வழிகாட்டி புத்தகம் இந்த பகவத்கீதை ஆகும்.

இஸ்கான், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் இத்தருணத்தில்  மனிதகுலத்தை ஆசீர்வதிக்கவும், வழிகாட்டவும் நாம் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டுவோமாக! ஒட்டுமொத்த ஹரே கிருஷ்ண உச்சரிப்பு ஆத்மாவில் வியாபித்து, ஸ்ரீகிருஷ்ணர் தனது கருணையை இஸ்கானின் எல்லா பக்தர்களுக்கும், அங்கத்தினர்களுக்கும் அளிப்பாராக.

இஸ்கான் சமூகத்திற்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஆன்மீக அதிர்வு தொலைதூரத்திற்கு எதிரொலித்து உலகை சிறந்த இடமாக மாற்றட்டும் என பிரார்த்திக்கின்றேன்.  

– நரேந்திர மோடி

நியூ டெல்லி

16 ஆகஸ்ட் 2019 (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *