ஸ்ரீபலராம் பூர்ணிமா
ஸ்ரீபலராம் பூர்ணிமா என்பது பகவான் ஸ்ரீபலராமர் அவதரித்த திருநாளாகும். பௌர்ணமி அன்று பலராமர் அவதரித்தால் ‘பலராம் பூர்ணிமா’ என்று அழைக்கப்படுகிறது.
‘பல என்றால் பலசாலி என்றும், ராம என்றால் ஆனந்தமானவர் என்றும் பொருள். பலராமர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விரிவங்கம் ஆவார். பலராமர் மிகவும் கருணை வாய்ந்தவரும், பக்தர்களின் பாதுகாவலரும் ஆவார், கிருஷ்ணரும் பலராமரும் என்றும் இணைபிரியாதவர்கள் ஆவர். பலராமர் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்மீக குரு ஆவார்.
மதுரை, திருநெல்வேலி, ராமஸே்வரம், ஸ்ரீரங்கம் உட்பட பல க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்து, கிருதுமாலா, தாமிரபரணி, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் ஸ்ரீலபலராமர் நீராடியுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.
பலராமரை வணங்கி, நம் மனதில் இருக்கும் அசுர எண்ணங்களை விலக்க பிரார்த்திப்போம்.
கர்க முனி கோபியருக்கு அளித்த
பலராமர் கவசம்
காமாத் ஸதா ரக்ஷது தேனுகாரி:
க்ரோதாத் ஸதா மாம் த்விவித-பிரஹாரி
லோபாத் ஸதா ரக்ஷது பல்வலாரிர்
மோஹாத் ஸதா மாம் கில் மஹதாரி:
தேனுகாசுரனை வதம் செய்த தேனுகாரியே! தயவு செய்து என்னை காமத்தில் இருந்த பாதுகாக்கவும்.
ஓ த்விவிதனை அழித்தவரே! என்னை கோபத்திலிருந்து விடுவிக்கவும்.
பல்வலாசுரனை அழித்த பல்வலாரியே! பேராசையிலிருந்து என்னை பாதுகாக்கவும்.
ஓ மஹதாரியே! தயவு செய்து என்னை மயக்கத்திலிருந்து பாதுகாக்கவும்.
திருநெல்வேலி இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராம் திருக்கோயிலில் அன்று பலராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று நடுப்பகல் வரை விரதம் இருப்பது சிறப்பு.
சிறப்புக்கட்டுரை படிக்கவும்: “அசுரர்களை வதம் செய்த பலராமர்”
Balaram Purnima click here to view Special – Tamil.PDF