நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது.
மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில், தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை அளித்தார். இதில் அவர் மன அழுத்தம் என்பது எல்லா தரப்பினரும் சந்திக்கும் ஒன்றாகும். அதிலும் மாணவர்கள் இவ்விஷயத்தில் கவனமாக கையாண்டால் கல்வியில் கவனம் செலுத்துவது எளிதாகி விடும். மன அழுத்தத்தினை சரி செய்ய, மந்திர தியானம் நல்லதொரு வழிமுறையாகும். விஞ்ஞானப் பூர்வமாகவும் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் ” என்று குறிப்பிட்டார்.
இந்த உரையின் மூலம் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். தொடர்ந்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
நிறைவாக பங்கேற்ற மாணவர்களுக்கு ஜபயோகப் பயிற்சி பற்றி விளக்கும் ‘நம்பர் ஒன் யோகா’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இந்த வகுப்பு குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் திரு.ரவிசங்கர் கூறுகையில், இன்றைய இளைஞர்களுக்கு இஸ்கான் நடத்தும் இது போன்ற வகுப்புகள் மிகவும் அவசியமானதாகும்” என்று குறிப்பிட்டார். ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர் திரு.கார்த்திக்கேயன் செய்திருந்தார்.