fbpx

உடலும், உயிரும்

”கிருஷ்ண அமுதம்”, டிசம்பர் 2019 – முற்றிலும் முரண்பட்ட இரண்டு வகையான உடல் ரீதியான கருத்துகள் உலகில் காணப்படுகின்றன. முதல் வகை, உடலே எல்லாம் எனக் கருதி உடலை முற்றிலும் புலன் நுகர்வில் ஈடுபடுத்துதல். மற்றொன்று உடல் பொயானது, பயனற்றது எனக் கருதி உடலை முறையாகப் பயன்படுத்தாது புறக்கணிப்பது. இந்த இரண்டு கருத்துகளுமே தவறானவைகளாகும் என்பது ஆச்சாரியர்கள் முடிவு.


உடலே எல்லாம் என்பவர்கள் புத்திசாலிகள் அல்லர்

உயிரற்ற உடல் அர்த்தமற்றது. உயிரே உடலின் செயல்
பாட்டிற்கு முழு காரணம். உயிர் நீங்கியவுடன் உடல் பயனற்றதாகிவிடுகிறது. ஆகவே உடலே எல்லாம் என்று கருதி புலன் சுகத்திற்காக மட்டுமே செயல்படு பவர்கள் நிச்சயமாக புத்திசாலிகள் அல்லர். உயிரே
உடலின் மதிப்பிற்கு காரணமாகும் என்பதை அவர்கள் அறியார்கள் அல்லது மறந்து இருக்கிறார்கள்.
இக்கருத்தை வசுதேவர் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்
பிட்டுள்ளார், யார் ஒருவர் இயற்கையின் முக்குணங்க ளால் உருவாக்கப்பட்ட, காணப்படும் உடலை ஆத்மா விலிருந்து சுதந்திரமானது என்று கருதுகிறாரோ, அவர் இருப்பின் அடிப்படையை அறியாதவர். அவர்
புத்திசாலி அல்ல. கற்றறிந்தவர்கள் இந்த முடிவை நிராகரித் துள்ளனர். ஏனெனில் ஆத்மாவின் அடிப்படை இல்லாமல், காணப்படும் இந்த உடலும், புலன்களும் பொரு ளற்றவை என்று ஆழ்ந்த விவாதத்தின் மூலமாக ஒருவர் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய முடிவு நிராகரிக்கப்
பட்டிருந்தும், முட்டாள் அது உண்மை என்றே கருதுகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம்: 10.3.18)

உடல் பொயானது என்பவர்களும்
புத்திசாலிகள் அல்லர்

மேற் கூறிய கருத்துக்கு முற்றிலும் எதிர்ப் படையாக, இந்த உடல் பொயானது என்று கருதி உடலை முற்றிலும் புறக்கணிப்பவர் களும் நிச்சயம் புத்திசாலிகள் அல்லர்.
இத்தகையோர் ஜகத் மித்யம்”, அதாவது இந்த உலகம் பொ” என்பார்கள். அவர்களு
டைய இந்த கூற்று சரியானதல்ல. உண்மை என்னவென்றால், இந்த உலகம் பொயான தல்ல, ஆனால் அது நிலையற்றது மற்றும் தற் காலிகமானது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் அநித்யம் அசுகம் லோகம்”
(ப.கீ.9.33) அதாவது இந்த உலகம் நிலையற்றது, சுகமற்றது” என்று இக்கருத்தை உறுதிப்படுத்துகிறார் ஆகையால் இந்த உலகத்தைச் சேர்ந்த, உடலும் நிலையற்றது, ஆனால் பொயானதல்ல.

உடல் உயிர் இரண்டும் பகவானின்
சக்திகளே என்பதே உண்மை

உடல், உயிர் இரண்டும் பகவானின் சக்தி
களே. உடல் பகவானின் கீழ் சக்தியான பகிரங்க சக்தியால் உருவாக்கப்படுகிறது. இந்த உடல் உருவாக உதவும் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும் பகவானின் ஜட இயற்கை சக்தியே என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை பதம் 7.4ல் உறுதிப்படுத்துகிறார்.
உயிரானது பகவானின் உயர் சக்தியான அந்தரங்கச் சக்தியைச் சேர்ந்ததாகும். இந்த கீழான இயற்கைக்கு அப்பால், என்னுடைய உயர்வான சக்தி ஒன்று உள்ளது. அது எல்லா உயிர்களையும் உள்ளடக்கியது..” என்று பகவான் கிருஷ்ணர் பகவத்கீதை பதம் 7.5ல் எல்லா உயிர்களும் தன்னுடைய உயர் சக்தி யாகும் என்று உறுதிப்படுத்துகிறார்.

உடலும் உயிரும் இணைந்த மத்தியம சக்தி

உடல் பகவானின் கீழ் சக்தியான பகிரங்கச்
சக்தியாகும், உயிர் பகவானின் உயர் சக்தியான
அந்தரங்க சக்தியாகும், உயிரானது உடல் எடுக்கும் போது, பகவானின் கீழ் சக்தியும், உயர் சக்தியும் ஒன்றாக இணைகிறது. ஆகையால் இந்த நிலை பகவானின் மத்தியம சக்தி என்று அழைக்கப்படுகின்றது.
இந்த உடல் வாழ்க்கையில், உடல் எடுத்த ஆத்மாக்களுக்கு ஓர் அரிய வாப்பு அளிக்கப்படுகின்றது. தான் பகவானின் உயர் சக்தி யான உயிர் என்று உணரும் போது அது பகவானை அடைந்து, உயர் வாழ்வைப் பெறுகின்றது. அல்லது தான் பகவானின் கீழ் சக்தியான உடல் என்ற உணர்வில் மூழ்கும் போது, அது இந்த ஜட வாழ்வில் மேலும் மேலும் ஆழமாக அழுந்து கிறது. இவை இரண்டில் எது தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது உடல் எடுத்த உயிரின் கையில் தான் இருக்கிறது.

உடல் என்பது ஆன்ம பரிபக்குவத்திற்கு
ஆண்டவன் கொடுத்த ஓர் வரப்பிரசாதம்

உடல் தற்காலிகமானதாக இருந்தாலும், புத்தி
சாலிகள் அதைப் புறக்கணிப்பதில்லை. ஆத்ம ஞானம் பெற அதாவது தான் பகவானின் உயர் சக்தி யான உயிர் என உணரவும், பகவானை உணரவும் அந்த உடலையே அவர்கள் உறுதுணையாகக் கொள்கின்றனர். உடலையும் அதன் புலன்களையும் ஆத்ம ஞானம் பெற, பகவானின் சேவையில் அவர்கள் ஈடுபடுத்துகின்றனர். இறுதியில் தன் உடல் தன்னுடன் வராவிட்டாலும், அந்த உடல் பகவானை அடையவும், ஆன்மிக பரிபக்குவம் அடையவும் உதவுகின்றது என்பதை புத்திசாலி அறிந்து அந்த உடலை முறையாகப் பயன்படுத்து கின்றான். ஆகையால் உடலை அவன் புறக்கணிப் பதில்லை. உடலானது உயிர் ஆன்ம பரிபக்குவம் அடைய ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் என்ற தெளிவுடையவனாக புத்திசாலி இருக்கிறான்.

*****

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ‘கிருஷ்ண அமுதம்’ மாத இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ‘கிருஷ்ண அமுதம்’ – இஸ்கான் மாத இதழ் ஆகும். கிருஷ்ண அமுதம் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர சந்தாததாரர் ஆவீர்.

விபரங்களுக்கு இஸ்கான் மதுரை அல்லது திருநெல்வேலி கோயிலை தொடர்பு கொள்ளவும். அல்லது  72 00 11 00 52 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


1 thoughts on “உடலும், உயிரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *