fbpx

Author : ISKCON

இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்

நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். இஸ்கான் மூத்த சந்நியாசிகளான தவத்திரு.கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜ் அவர்களும், தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜ் அவர்களும் இதன் முக்கியத்துவம் குறித்து (ஆன்லைனில்) ஆசியுரை வழங்கினர். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த சத்சங்கத்தில் இஸ்கானின் பல மையங்களில் […]

சிறப்புடன் நடைபெற்றது “தாமோதர தீபத் திருவிழா” !

நவம்பர் 12, 2019 –  “தாமோதர தீபத்திருவிழா” மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான்  கோயில்களில் இவ்வருடம் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது. ஒரு மாத காலம் நடை பெற்ற இவ்விழாவில் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் “தாமோதர தீப அலங்காரத்தில்” எழுந்தருளினர். சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினர். விழாவின் சிறப்பம்சமாக என்னவென்றால், இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் […]

இன்றைய இளைஞர்களுக்கு இந்த வகுப்புகள் அவசியம்!

IYF Prg at RVS College 1.11.2019

நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது. மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில், தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை அளித்தார். இதில் அவர் மன அழுத்தம் என்பது எல்லா தரப்பினரும் சந்திக்கும் ஒன்றாகும். அதிலும் மாணவர்கள் இவ்விஷயத்தில் கவனமாக கையாண்டால் கல்வியில் கவனம் செலுத்துவது […]

யோகிகளில் சிறந்த யோகி!

கிருஷ்ண அமுதம் , அக்டோபர் 2017 – தாய் யசோதை, வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த அறிவாளியாகவோ அல்லது கடினமான யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட அஷ்டாங்க யோகியாகவோ இல்லாமல், சாதாரண ஆயர் குலப் பெண்ணாக இருந்தும், யோகிகளில் எல்லாம் மிகச் சிறந்த யோகியென அவள் கருதப்படுகிறாள். மர உரலோடு சேர்த்து, குழந்தை கிருஷ்ணரை தாய் யசோதை கயிற்றால் கட்டிய நிகழ்ச்சியான தாமோதர லீலா இக்கருத்தை உறுதி செய்கிறது. இந்த தாமோதர லீலா, தீபாவளித் திருநாள் அன்று நிகழ்ந்தது என்று […]

நல்ல பண்பும், சீரிய சிந்தனையும் தரும் பயிற்சி!

செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை அளித்தார். இதில் அவர் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் நீங்கள் நற்பண்புகளுடனும், சீரிய சிந்தனைகளுடனும் வளர்ந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதற்கான அஸ்திவாரமே […]

நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுத் தந்தது!

செப்டம்பர் 30, 2019 – இளைஞர்கள் யாத்ராவில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து… தென் தமிழகத்தில் உள்ள இஸ்கான் மையங்கள் மற்றும் நாமஹட்டாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ‘யோகா விழிப்புணர்வு யாத்ரா’ கடந்த செப்டம்பர் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்றது. ‘மதுரை, ராமநாதபுரம், திருப்புல்லாணி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சேத்திரங்களில் நடைபெற்ற இந்த யாத்ராவினை இஸ்கான் தென்தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரிபிரபு அவர்கள் வழிநடத்தினார். செப்டம்பர் 27ம் தேதி மாலை எல்லோரும் மதுரை இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி […]

சிறப்புடன் நடைபெற்றது “ஸ்ரீ ராதாஸ்டமி”!

செப்டம்பர் 6, 2019 – மதுரை மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயிலில் ஸ்ரீராதாஷ்டமி விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக, ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்சகவ்ய, பஞ்சாமிர்த அபிசேகங்கள் நடைபெற்றன. இஸ்கான் மதுரை மற்று திருநெல்வேலி கிளையின் தலைவர் அருட்திரு.சங்கதாரி தாஸ் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் அவர், “ஸ்ரீமதி ராதாராணி தூயபக்தையும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகளுக்கெல்லாம் தலைமையானவர். […]

இந்தியர்களுக்கு சாதுக்களை மதிக்கத் தெரியும்!

– ‘கிருஷ்ண அமுதம்’  * ஆகஸ்ட் 2019 – 1977. இஸ்கான் கிருஷ்ண பலராம் ஆலயம்.  விருந்தாவனம். நான் விருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் கோயிலில் பூஜாரியாக சேவை செய்து கொண்டிருந்தேன். அச்சமயம் ஸ்ரீலபிரபுபாதாவின் உடல் நலம் மிகவும் குன்றியிருந்ததால் விருந்தாவனத்தில் தொடர்ந்து தங்கியிருந்தார்.  அப்போது ஸ்ரீலபிரபுபாதா, தினமும்   ஒரு சக்கர நாற்காலியில் வந்து  கிருஷ்ண பலராமரை தரிசப்பது வழக்கம்.  தரிசனத்திற்கு பிறகு ஸ்ரீஸ்ரீராதா ஷியாம் சுந்தர் சன்னதி முன்பாக உள்ள திறந்த வெளியில் […]

கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா!

ஆகஸ்ட் 24, 2019 – பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் ஆகஸ்ட் 24, 25 இரண்டு நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக முறைப்படியும், ஆக.25ம் தேதி மதுரா நகர முறைப்படியும் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர், புதிய வஸ்திரம் உடுத்தி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.  அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 108 கலசாபி@ஷகமும், […]

பிரதமர் வாழ்த்துரை…

ஆகஸ்ட் 16, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டதாவது; மங்களகரமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீகிருஷ்ணரின் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாகும். ஸ்ரீகிருஷ்ணரின் செய்தி, ஞானம், தெய்வீக தத்துவத்தைப் பரப்புவதில் இஸ்கான் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இஸ்கானின் அங்கத்தினர்கள் இறைத்தொண்டு மற்றும் மனிதநலத் தொண்டு ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த வகையில், பல மனித நேய நலத் தொண்டுகள் மூலமாக […]