– திருநெல்வேலியில் பலராம் பூர்ணிமா நடைபெற்றது…ஆகஸ்ட் 15, 2019 – பகவான் ஸ்ரீபலராமரின் அவதார திருநாளான பலராம் பூர்ணிமா திருநெல்வேலி இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் திருக்கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் சிறப்பாக பலராமர் நீலநிற பட்டு உடுத்தியும், கிருஷ்ணர் மஞ்சள் நிற பட்டு உடுத்தியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது. மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவில் பலராமரின் சிறப்பு குறித்து, […]
Author : ISKCON
ஆகஸ்ட் 11, 2019 – ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு முன்பாக வரும் ஏகாதசி முதல் பௌர்ணமி வரை கொண்டாடப்படும் ஊஞ்சல் உற்சவமே ‘ஜுலன் யாத்ரா’ ஆகும். இவ்வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. ‘ஜூலன்’ என்றால் ஊஞ்சல். ‘யாத்ரா’ என்றால் விழா. ஜூலன் யாத்ரா, கிருஷ்ணருக்கு பிரியமானதும், ஸ்ரீமதி ராதாராணியை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதும் ஆகும். வருடந்தோறும் ஜூலன் யாத்ரா விழா நாட்களில் இஸ்கான் கோயிலில் தினசரி மாலை 6 மணிக்கு துவங்கும் பூஜைகளை […]
கிருஷ்ண அமுதம் * மே 2017 – மத்திய ஆசியாவில் வாழக்கூடிய மான் இனங்களில் ஒன்று ‘கஸ்தூரி மான்’. அந்த கஸ்தூரி மானின் மடியிலிருக்கும் பையிலிருந்து விலைமதிப்பற்ற வாசனைத் திரவியம் சுரக்கின்றது. இதற்கு பெயர் தான் ‘கஸ்தூரி’ ஆகும். இந்த திரவம், மிக மிக நறுமண வாசனை பொருந்தியது. வெகு தொலைவில் இருப்பவர்களால் கூட இதன் நறுமணத்தை உணர முடியும். மேலும் கிடைப்பதற்கு மிக அரிதான இந்த கஸ்தூரி திரவம், ஏராளமான நறுமணப்பொருட்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இதன் […]
ஜூன் 30, 2019 – பாணிஹட்டி சிதா தஹி என்றழைக்கப்படும் கிருஷ்ண பக்தி விழா இஸ்கான்கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரமத்தில் இவ்விழா நடைபெற்றது. பலராமரின் அவதாரமான ஸ்ரீநித்யானந்த பிரபுவின் கட்டளையின் பேரில், தூயபக்தரான ஸ்ரீலரகுநாத கோஸ்வாமி அவர்கள் ‘பாணி ஹட்டி’ எனும் இடத்தில் நடத்திய திருவிழாவே இதன் அடிப்படையாகும். விழாவின் சிறப்பம்சம் பகவானுக்கு தீர்த்தவாரியும், தயிர் மற்றும் அவல் கலந்த பிரசாதமும், ஹரிநாமசங்கீர்த்தனமும் ஆகும். பெருவாரியான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பகவான் […]
கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017 அஜாமிளனின் உயிரை மீட்டுத் தந்த விஷ்ணு தூதர்கள், அவன் உயிரைப் பறித்த யமதூதர்களி டம், பகவான் நாராயணனின் நாமத்தை அஜாமிளன் உச்சரித்ததாலேயே அவனுடைய அனைத்துப் பாவங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் அவன் யமராஜாவின் தண்டனைக்கு உரியவன் அல்ல என்பதையும் ஸ்ரீமத் பாகவதம் பதம் 6.2.7 முதல் பதம் 6.2.19 வரை பலவகைகளில் உறுதிப்படுத்துகின்றனர். நாம மகிமை அறியாமல் நாராயண நாமம் உச்சரித்த அஜாமிளனின் கோடி பிறவி பாவங்கள் அழிந்தன அஜாமிளன், […]
மதுரா, விருந்தாவனம் போல் ‘மாயாப்பூர்’ ஸ்தலமும் கிருஷ்ணரின் திவ்யமான லீலைகள் நிறைவேறிய புண்ணிய பூமியாகும். ஆனால் இந்த பூமியில் கிருஷ்ணர், பக்தர் வடிவில் பவனி வந்தார்” என்று ஆர்வத்துடன் கூற ஆரம்பித்தினர் மாயாப்பூர் சென்று வந்த பக்தர்கள். இஸ்கான் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலி கிளையின் மூத்த பக்தர்கள் வழிநடத்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாயாப்பூர் சென்று வந்தனர். இவர்கள் […]
மே 18, 2019 – மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி, ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபலராமர் ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ‘ஸ்ரீநரசிம்ம சதுர்தசி சிறப்பு அலங்காரத்தில்’ அருள்பாலித்தனர். தொடர்ந்து ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஒன்பது கலசங்களில் இருந்து விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன. மாலை 6 மணியளவில் பால், பழம் உள்ளிட்ட பஞ்சகவ்யம், பஞ்சாமிர்த்ம், பன்னீர், இளநீர் மற்றும் பழரசங்கள் போன்ற பல வகையான அபிஷேகங்கள் […]
கிருஷ்ண அமுதம் * ஏப்ரல் 2017 – நம் காலம் கலி காலம் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலிகாலமாகும். கலி என்றாலே சண்டை சச்சரவுகள் நிரம்பியது என்று பொருள். கலி காலம் அனைத்துக் கேடுகளும் நிரம்பியதாக உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் தொகுத்தளிக்கும் கலியுகத்தின் கேடுகள் ஸ்ரீமத் பாகவதத்தில் கலி காலத்தின் கேடுகள் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. கலியுகத்தில், மக்கள் அல்ப ஆயுசை உடையவர்களாகவும், சண்டை, சச்சரவு நிரம்பியவர்களாகவும், மந்தமானவர்களாகவும், தவறாக வழிநடத்தப்படுபவர்களாகவும், துரதிர்ஷ்டசாலிகளாகவும், […]
ஏப்ரல் 14-19, 2019 – தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும், ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் நடந்தது. விழாவை முன்னிட்டு ஸ்ரீலபிரபுபாதா எழுதிய பகவத்கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் அழகர் கோவில் மஹாத்மியம் குறித்த ‘கிருஷ்ண அமுதம்’ சிறப்பிதழ் ஏராளமான மக்களின் மனதை கவர்ந்தது. இந்த புத்தக விநியோகத்தில் மதுரை, திருநெல்வேலி, தேனி மாவட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிருஷ்ண அமுதம் * மார்ச் 2017 ஒரு சமயம் ஒரு ஏழை ஒருவர், செல்வத்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டார். ஏழையின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த ஏழைக்கு நீங்காத செல்வத்தை அளிக்க விரும்பினார். எனவே அந்த ஏழை முன்பாக தோன்றிய சிவபெருமான் அவரிடம், “விருந்தாவனத்தில் யமுனை நதிக்கரையில் துவாதச ஆதித்ய குன்றில் சனாதனர் என்ற பெயருடைய சாது ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஒரு சிந்தாமணி கல்லை வைத்திருக்கிறார். அக்கல் இரும்பை தூய தங்கமாக மாற்றும் வல்லமையுடையது. […]