fbpx

Events

சிறப்புடன் நடைபெற்றது “தாமோதர தீபத் திருவிழா” !

நவம்பர் 12, 2019 –  “தாமோதர தீபத்திருவிழா” மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான்  கோயில்களில் இவ்வருடம் அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 12 வரை நடைபெற்றது. ஒரு மாத காலம் நடை பெற்ற இவ்விழாவில் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் “தாமோதர தீப அலங்காரத்தில்” எழுந்தருளினர். சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினர். விழாவின் சிறப்பம்சமாக என்னவென்றால், இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் […]

நல்ல ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுத் தந்தது!

செப்டம்பர் 30, 2019 – இளைஞர்கள் யாத்ராவில் பங்கேற்ற மாணவர்களின் கருத்து… தென் தமிழகத்தில் உள்ள இஸ்கான் மையங்கள் மற்றும் நாமஹட்டாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ‘யோகா விழிப்புணர்வு யாத்ரா’ கடந்த செப்டம்பர் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்றது. ‘மதுரை, ராமநாதபுரம், திருப்புல்லாணி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சேத்திரங்களில் நடைபெற்ற இந்த யாத்ராவினை இஸ்கான் தென்தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரிபிரபு அவர்கள் வழிநடத்தினார். செப்டம்பர் 27ம் தேதி மாலை எல்லோரும் மதுரை இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி […]

கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா!

ஆகஸ்ட் 24, 2019 – பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்களில் ஆகஸ்ட் 24, 25 இரண்டு நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக முறைப்படியும், ஆக.25ம் தேதி மதுரா நகர முறைப்படியும் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி மற்றும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர், புதிய வஸ்திரம் உடுத்தி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.  அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 108 கலசாபி@ஷகமும், […]

இஸ்கான் பெரியகுளத்தில் பாணிஹட்டி விழா

ஜூன் 30, 2019 – பாணிஹட்டி சிதா தஹி என்றழைக்கப்படும் கிருஷ்ண பக்தி விழா  இஸ்கான்கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரமத்தில்  இவ்விழா நடைபெற்றது. பலராமரின் அவதாரமான ஸ்ரீநித்யானந்த பிரபுவின் கட்டளையின் பேரில், தூயபக்தரான ஸ்ரீலரகுநாத கோஸ்வாமி அவர்கள் ‘பாணி ஹட்டி’ எனும் இடத்தில் நடத்திய திருவிழாவே  இதன் அடிப்படையாகும். விழாவின் சிறப்பம்சம் பகவானுக்கு தீர்த்தவாரியும், தயிர் மற்றும் அவல்  கலந்த பிரசாதமும், ஹரிநாமசங்கீர்த்தனமும் ஆகும். பெருவாரியான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பகவான் […]

மஹாபிரபு அவதரித்த ‘மாயாப்பூர்’ நவத்வீப் யாத்ரா’ கட்டுரை – பகுதி 1

மதுரா, விருந்தாவனம் போல் ‘மாயாப்பூர்’ ஸ்தலமும்  கிருஷ்ணரின் திவ்யமான லீலைகள் நிறைவேறிய புண்ணிய பூமியாகும். ஆனால் இந்த பூமியில் கிருஷ்ணர்,   பக்தர் வடிவில் பவனி வந்தார்” என்று ஆர்வத்துடன் கூற ஆரம்பித்தினர் மாயாப்பூர் சென்று வந்த பக்தர்கள். இஸ்கான் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்,  இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலி கிளையின்  மூத்த பக்தர்கள் வழிநடத்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாயாப்பூர் சென்று வந்தனர். இவர்கள் […]

சிறப்புடன் நடைபெற்றது ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா!

மே 18, 2019 – மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான் கோயில்களில்  சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி, ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபலராமர்  ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ‘ஸ்ரீநரசிம்ம சதுர்தசி சிறப்பு அலங்காரத்தில்’ அருள்பாலித்தனர். தொடர்ந்து ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஒன்பது கலசங்களில் இருந்து விசேஷ தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு பூஜிக்கப்பட்டன.  மாலை 6 மணியளவில் பால், பழம் உள்ளிட்ட பஞ்சகவ்யம், பஞ்சாமிர்த்ம், பன்னீர், இளநீர் மற்றும் பழரசங்கள் போன்ற பல வகையான அபிஷேகங்கள் […]

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு!

ஏப்ரல்  14-19, 2019 –  தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும், ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் நடந்தது.  விழாவை முன்னிட்டு  ஸ்ரீலபிரபுபாதா எழுதிய பகவத்கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் அழகர் கோவில் மஹாத்மியம் குறித்த ‘கிருஷ்ண அமுதம்’ சிறப்பிதழ் ஏராளமான மக்களின் மனதை கவர்ந்தது.  இந்த புத்தக விநியோகத்தில் மதுரை, திருநெல்வேலி, தேனி மாவட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உயர்ந்த சுவையே தாழ்ந்த சுவையை விரட்டும்!

மார்ச் 13, 2019 – மதுரை தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மந்திரா மெடிட்டேஷன் குறித்த அறிமுக வகுப்பை இஸ்கான் நடத்தியது.  தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்பில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இஸ்கான் தென் தமிழக மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள்   சிறப்புரை ஆற்றினார். இதில் அவர்,  தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட ஒரே வழி நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதேயாகும். […]

ஒழுக்கம் தவறாமல் இருக்க ஆன்மீக பயிற்சி அவசியம்!- நிறைவு விழாவில் காவல்துறை டிஐஜி அறிவுரை!

மார்ச் 5, 2019 – ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்”  என்ற தொடர் வகுப்பை   ஜனவரி முதல் மார்ச் 2019 வரை  பல பகுதிகளாக இஸ்கான் நடத்தியது.   முதலாமாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த பயிற்சிக்கான வகுப்புகள்,  மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் மையங்களின் மூத்த யோகாசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ்  நடைபெற்றன. அண்மையில் இதன் நிறைவு விழா மார்ச் 5, 2019 அன்று நடைபெற்றது.  மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறை […]

நீதித்துறையிலும் தியானம் மிகவும் அவசியம்!

பிப்ரவரி 14, 2019 –   சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் –ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ –ஞுஞீடிணாச்ணாடிணிண) என்ற சிறப்பு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது. மதிப்பிற்குரிய நீதிபதி திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.  அவர் தனது தலைமை உரையில், உலகம் முழுவதும், நீதித்துறை உட்பட அனைத்திலும் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார். இஸ்கானின் தென் தமிழகச் […]