மார்கழி மாதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்த மாதமாகும். எனவே தான் பகவத்கீதை 10.35ல் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி” என்று கூறுகிறார். (மாஸானாம் மார்கசீர் ஷோ அஹம்) மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே எழுந்து நீராடி பகவானின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடந்த கால, எதிர் கால பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அது மட்டுமல்லாது நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்று திருப்பாவை கூறுகிறது. […]
News
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் விரதம் இருக்க வேண்டிய நாள்: ஆகஸ்ட் 30, 2021 திங்கள் கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இவ்வருடம் தமிழக முறைப்படியும், கிருஷ்ணர் பிறந்த மதுரா முறைப்படியும் சேர்ந்து ஒரே நாளில் ஆகஸ்ட் 30ம் தேதி திங்கள் கிழமை அனுசரிக்கப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கும் முறை ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் எழுந்து ஶ்ரீகிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்து, “கிருஷ்ணா! இன்று நான் ஜென்மாஷ்டமி விரதம் இருக்கப் போகிறேன். தயவு செய்து உங்கள் […]
அன்பிற்குரிய கிருஷ்ண பக்தருக்கு,ஹரே கிருஷ்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம். வருடந்தோறும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாளான ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா காலத்தில் தாங்கள், ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவா நன்கொடை வழங்கி வருவதற்கு மிகவும் நன்றி. இந்த நன்கொடை இஸ்கான் மதுரை ஶ்ரீஶ்ரீராதா மதுராபதி, இஸ்கான் திருநெல்வேலி ஶ்ரீஶ்ரீகிருஷ்ண பலராமர் திருவிக்ரஹங்களின் வழிபாடும் இந்த கோயிலின் மற்ற சேவைகளும் தடையில்லாமல் நடைபெற உதவிகரமாக இருந்தது. இவ்வருடம் வர இருக்கும் ஶ்ரீகிருஷ்ண […]
ஶ்ரீல பிரபுபாதாவின் நேரடி சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான “தவத்திரு.பக்தி சாரு ஸ்வாமி மஹாராஜ்” அவர்கள் தனது 74வது வயதில், கடந்த ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா-டீலேண்ட் எனும் இடத்தில் கிழக்கத்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு ஶ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைச் சென்றடைந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்கானில் அயராது சேவை ஆற்றிய இவர் உலகளாவிய இஸ்கான் நிர்வாக அமைப்பின் கவர்னராகவும் (ஜிபிசி), தீட்சையளிக்கு ஆன்மீக குருவாகவும் திகழ்ந்தவர் ஆவார். நம் பாரததேசத்தின் […]
விரதங்களில் அதிமுக்கியமானது ‘ஏகாதசி’ விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அதில் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். (ஜனவரி 6, 2020 திங்கள்) வேதசாஸ்திரங்கள், ‘ஏகாதசி’, ‘கிருஷ்ணரின் திருநாள்’ என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி என்றால் என்ன? சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து […]
மார்கழி மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் (Sagitarius) நுழைவதிலிருந்து மகர ராசியில் (Capiricon) நுழைவது வரை உள்ள ஒரு மாத காலம் தனுர் மாதம் அல்லது மார்கழி என்று அழைக்கப்படுகிறது. பகவத் கீதையில் மார்கழியின் சிறப்பு பகவத் கீதை 10.35ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’ என்று கூறுவது, மாதங்கள் பன்னிரெண்டில் மார்கழியின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது. தனுர்மாச பல ஸ்ருதி ‘தனுர்மாசத்தில் ஒவ்வொரு நாள் விஷ்ணு வழிபாடும், […]
”கிருஷ்ண அமுதம்”, டிசம்பர் 2019 – முற்றிலும் முரண்பட்ட இரண்டு வகையான உடல் ரீதியான கருத்துகள் உலகில் காணப்படுகின்றன. முதல் வகை, உடலே எல்லாம் எனக் கருதி உடலை முற்றிலும் புலன் நுகர்வில் ஈடுபடுத்துதல். மற்றொன்று உடல் பொயானது, பயனற்றது எனக் கருதி உடலை முறையாகப் பயன்படுத்தாது புறக்கணிப்பது. இந்த இரண்டு கருத்துகளுமே தவறானவைகளாகும் என்பது ஆச்சாரியர்கள் முடிவு. உடலே எல்லாம் என்பவர்கள் புத்திசாலிகள் அல்லர் உயிரற்ற உடல் அர்த்தமற்றது. உயிரே உடலின் செயல் பாட்டிற்கு முழு […]
நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். இஸ்கான் மூத்த சந்நியாசிகளான தவத்திரு.கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜ் அவர்களும், தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜ் அவர்களும் இதன் முக்கியத்துவம் குறித்து (ஆன்லைனில்) ஆசியுரை வழங்கினர். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த சத்சங்கத்தில் இஸ்கானின் பல மையங்களில் […]
நவம்பர் 1, 2019 – திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியற் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான யோகா பற்றிய அறிமுக உரையை மதுரை இஸ்கான் நடத்தியது. மன அழுத்தத்தை கையாள்வது எப்படி? ” (How to Manage Streess?) என்ற தலைப்பில், தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சிறப்புரை அளித்தார். இதில் அவர் மன அழுத்தம் என்பது எல்லா தரப்பினரும் சந்திக்கும் ஒன்றாகும். அதிலும் மாணவர்கள் இவ்விஷயத்தில் கவனமாக கையாண்டால் கல்வியில் கவனம் செலுத்துவது […]
செப்டம்பர் 30, 2019 – திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்களுக்கு நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்” (Personality & Character Development Course) என்ற பயிற்சி வகுப்பை இஸ்கான் நடத்தியது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்புரை அளித்தார். இதில் அவர் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் நீங்கள் நற்பண்புகளுடனும், சீரிய சிந்தனைகளுடனும் வளர்ந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதற்கான அஸ்திவாரமே […]
- 1
- 2