ஜூன் 30, 2019 – பாணிஹட்டி சிதா தஹி என்றழைக்கப்படும் கிருஷ்ண பக்தி விழா இஸ்கான்கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரமத்தில் இவ்விழா நடைபெற்றது. பலராமரின் அவதாரமான ஸ்ரீநித்யானந்த பிரபுவின் கட்டளையின் பேரில், தூயபக்தரான ஸ்ரீலரகுநாத கோஸ்வாமி அவர்கள் ‘பாணி ஹட்டி’ எனும் இடத்தில் நடத்திய திருவிழாவே இதன் அடிப்படையாகும். விழாவின் சிறப்பம்சம் பகவானுக்கு தீர்த்தவாரியும், தயிர் மற்றும் அவல் கலந்த பிரசாதமும், ஹரிநாமசங்கீர்த்தனமும் ஆகும். பெருவாரியான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன்
பங்கேற்று பகவான் நாமங்களை உச்சரித்து, பிரசாதங்களை ஏற்று மகிழ்ந்தனர். முன்னதாக தென்தமிழக இஸ்கான் மண்டலச் செயலாளர் திரு.சங்கதாரி பிரபு அவர்கள் விழாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
Warning: Trying to access array offset on value of type bool in /home4/iskcokzj/iskconmadurai.com/wp-content/themes/iskcontheme/inc/shortcodes/share_follow.php on line 41
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.
Hare krishna