மக்கள் நல நிகழ்ச்சிகள்

கிருஷ்ண பக்தியை அறிமுகம் செய்யும் பொருட்டு தென்மாவட்டங்களின் நகரம் மற்றும் கிராமங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள மஹால்களில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பொதுவாக கிருஷ்ண பக்தியைப் பற்றிய அடிப்படை தத்துவங்கள் மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் மஹாமந்திர ஜபத்தை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஆன்மீக கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்போர் மேலும் ஊக்குவிக்கப்பட்டு கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்குபெறுமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். அவர்கள் படிப்படியாக கிருஷ்ண பக்தியை புரிந்துகொள்ள முன்னேறவும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். ஒரு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிருஷ்ண பக்தியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றது.
ALANGULAM CHINNAMANOOR DINDIGUL GANGAIKONDAN GURUKUL BOYS VISIT JAIHINDPURAM MADURAI KADAYANALLUR KAMARAJAR SALAI, MADURAI KEELAVASAL, MADURAI MAHALIPATTI. MADURAI MUNICHALAI, MADURAI PALAYAMKOTTAI THENI RAJAPALAYAM RAMANATHAPURAM VIRUDHUNAGAR