கிருஷ்ண அமுதம் சந்தா
ஒரு வருடம் ரூ. 250 👇 இரண்டு வருடம் ரூ. 500
ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண அமுதம் மாத இதழை படிப்பதற்கான தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
- கிருஷ்ண அமுதம் சந்தா செலுத்த மேலே உள்ள லிங்கில் சென்று செலுத்தலாம்.
- பிரதி மாதம் 20ம் தேதிக்குள் வந்து செலுத்தப்படும் சந்தாக்களுக்கு மட்டுமே அடுத்த மாதத்திலிருந்து கிருஷ்ண அமுதம் அனுப்பப்படும்.
- கிருஷ்ண அமுதம் இதழ் உங்களுக்கு சரியாக வந்தடைய பெயர், முழு முகவரி, மாவட்டம், பின்கோடு, மொபைல் நம்பர் இவற்றை சந்தா செலுத்தும் போது தெளிவாக குறிப்பிடவும்.
- சந்தா ரசீது உங்கள் இமெயிலுக்கு வந்து சேரும்.
- சந்தா செலுத்திய பின், செலுத்திய சந்தா தொகையை நீங்கள் திரும்ப பெற இயலாது. வேறொரு பெயர், முகவரிக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
- பிரதி மாதம் 15ம் தேதிக்குள் உங்கள் முகவரிக்கு கிருஷ்ண அமுதம் இதழ் வந்து சேரும். வரவில்லை என்றால் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்/SMS மூலமாக தகவல் தெரிவிக்கவும். சில மாதங்களில் தேதி மாற்றம் இருக்கலாம். (தபால் தவறுதல்களுக்கு இஸ்கான் பொறுப்பல்ல)
- சந்தா புதுப்பித்தல், முகவரி மாற்றம், வாசகர் கருத்துக்கள், மற்றும் மாத இதழ் தொடர்பான எல்லா விவரங்களுக்கும் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவோ (அல்லது) krishna.amutham@gmail.com என்ற இமெயிலுக்கோ பிரதி மாதம் 20ம் தேதிக்குள் தெரிவிக்கவும்.
நன்றி. ஹரே கிருஷ்ணா.
– கிருஷ்ண அமுதம் மாத இதழ் பிரிவு,
இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை–625001
Ph/Whatsapp: 7200110052
Email: krishna.amutham@gmail.com
மக்களிடம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்கான் வெளியீடும் ஆன்மீக மாத இதழ் ‘கிருஷ்ண அமுதம்’ ஆகும்.
யோகா, தியானம், ஆரோக்கியம், கீதைநெறிகள், கிருஷ்ணரின் அமுத லீலைகள், பிரபுபாதாவின் உயிர்துடிப்புள்ள சொற்பொழிவுகள், மாணவர்களை நெறிப்படுத்தும் நன்னெறி கட்டுரைகள் என்று பல பயனுள்ள விஷயங்களை தாங்கி மாதந்தோறும் வெளிவருகிறது கிருஷ்ண அமுதம் இதழ்.
கிருஷ்ண அமுதம் இதழின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பகவத்கீதை, பாகவதம் போன்ற உயர்ந்த வேதசாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நடைமுறைக்கேற்றவாறு தரப்படுகிறது. அதே சமயம் அதன் கருத்துக்கள் சிதையாமலும், அதிகாரப் பூர்வமான முறையிலும், படிப்பதற்கு எளிமையான தமிழிலும் பிரசுரிக்கப்படுகிறது”.
முதன்முதலில் 1999ல் இஸ்கான் உலகம்” என்ற பெயரில் சிறியதொரு முயற்சியாக துவக்கப்பட்ட இந்த இதழ், படிப்படியாக ஏராளமான மக்களின் இதயங்களில் இடம் பிடித்தது.
தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் வடிவமைப்புகளில் மென்மேலும் முன்னேற்றம் செய்யப்பட்டு கடந்த 2014ல் ‘கிருஷ்ண அமுதம்” என்ற தெய்வீக பெயருடன் வலம் வரத் துவங்கியது.
மக்கள் மத்தியில் தெய்வ சிந்தனையை வளர்த்து, நல்ல நெறிகளை கடைபிடிக்கச் செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகிறது கிருஷ்ண அமுதம். ஒரு முறையேனும் கிருஷ்ண அமுதத்தை படித்தவர்கள், நிச்சயம் வாழ்வின் உண்மையான நோக்கத்தை அறிந்து செயல்பட முயல்வார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ண அமுதம் இதழ் இருந்தால், அதனை குடும்பத்தினர் அனைவரும் படித்து பெரும் பயனடைவர். முக்கியமாக குழந்தைகளையும், இளைஞர் சமுதாயத்தையும் நெறி பிறழாமல் வளர்த்திட, கிருஷ்ண அமுதம் இதழ் துணை நிற்கும். ஹரே கிருஷ்ணா.
– கிருஷ்ண அமுதம் மாத இதழ் பிரிவு,
இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை–625001
Ph/Whatsapp: 7200110052
Email: krishna.amutham@gmail.com