நவம்பர் 12-15, 2019, இஸ்கான் இந்தியா இளைஞர் சத்சங்கம்( ISKCON India Youth Convention) ராஜஸ்தானில் உள்ள புனித ஸ்தலமான ‘நாத் துவாரா’ நகரத்தில் நடைபெற்றது. இந்த சத்சங்கத்தை ‘நாத் துவாரா’ ஸ்ரீநாத்ஜி கோயிலின் மூத்த நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
இஸ்கான் மூத்த சந்நியாசிகளான தவத்திரு.கோபால கிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜ் அவர்களும், தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜ் அவர்களும் இதன் முக்கியத்துவம் குறித்து (ஆன்லைனில்) ஆசியுரை வழங்கினர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த சத்சங்கத்தில் இஸ்கானின் பல மையங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர் நல பிரிவின் முழுநேர பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக இந்த சத்சங்கத்தில் இளைஞர்களுக்கு பக்தியை வழங்கி நல்வழிப்படுத்துவதில் ஸ்ரீலபிரபுபாதாவின் பங்கு, இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய தூய்மை, பண்புகள் மற்றும் முதிர்ச்சியைப் பற்றியும், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற தலைப்புகளில் சிறப்பு உரைகள் வழங்கப்பட்டன.
இவ்வுரைகளை திரு.பாஸுகோஷ் பிரபு, திரு.வைஷ்ணவ ஸ்வாமி, திரு.தேவகி நந்தன் பிரபு, திரு.ராதே ஷியாம் பிரபு, திரு.பக்தி வினோத் பிரபு, திரு.சங்கதாரி பிரபு, திரு.சங்கர்ஷன் நித்தாய் பிரபு, திரு.கமல லோசன் பிரபு உட்பட இஸ்கானின் மூத்த பக்தர்கள் பலரும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு.அதுல்கிருஷ்ண பிரபு, திரு.கமல்லோசன பிரபு, திரு.ரவீந்திர சைதன்ய பிரபு, திரு.சக்கரவர்த்தி பிரபு உட்பட பல பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். இஸ்கான் உதய்ப்பூர் மேலாளர் திரு.மாயாப்பூர் வாசி பிரபு மற்றும் இஸ்கான் உதய்பூர் பக்தர்களின் அயராத முயற்சி இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற பெரிதும் உறுதுணைபுரிந்தது. பிரசாத ஏற்பாடுகளை திரு.பிரஜ பிஹாரி பிரபு அவர்கள் தலைமையில் இஸ்கான் சூரத் பக்தர்கள் செய்திருந்தனர்.
சிறப்பம்சமாக கோவர்த்தன கிரி மலையை தூக்கிய வண்ணம் இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநாத்ஜியை பக்தர்கள் அனைவரும் ஒருசேர சென்று தரிசித்து, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்து வழிபட்டனர்.