fbpx

Articles

ஏன் கிருஷ்ணருக்காக உழைக்கக் கூடாது?

ஸ்ரீல பிரபுபாதா ஆற்றிய ஸ்ரீமத் பாகவத உரையிலிருந்து… (1.8.48) ( மே 10, 1973 லாஸ் ஏஞ்சல்ஸ்) அஹோ மே பஸ்ய தாக்ஞானம்   ஹ்ருதி ரூடம் துராத்மன: பாரக்யஸ்பைவ தேஹஸ்ய    பஹ்வ்யோ மே அக்ஷவ்ஹிணிர் ஹதா: யுதிஷ்டிர மஹாராஜா கூறினார், என் விதியே, நான் மிகப் பெரிய பாவியாவேன். அறியாமை நிரம்பியுள்ள என் இதயத்தைப் பார்! முடிவாக பிறருக் காகவே இருக்க வேண்டிய இவ்வுடல், பற்பல படைப் பிரிவுகளைக் கொண்ட வீரர்களைக் கொன்று குவித்துள்ளது” […]

கிருஷ்ண பக்தி பெரும் சக்தி வாய்ந்தது!

பகவத்கீதை உண்மையுருவில் பதம் 9.2க்கு ஸ்ரீலபிரபுபாதா வழங்கிய விளக்கவுரையில் இருந்து. . . பரம புருஷரின் பக்தித் தொண்டில் உண்மையாக ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். இக்கருத்து பத்ம புராணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்ராரப்த-பலம் பாபம் கூடம் பீஜம் பலோன்முகம் க்ரமேணைவ ப்ரலீயேத விஷ்ணு-பக்தி-ரதாத்மனாம் பரம புருஷ பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு பழுத்தவை, காத்திருப்பவை, விதையாக உள்ளவை என எல்லாப் பாவ விளைவுகளும் படிப்படியாக அழிந்து விடுகின்றன. எனவே பக்தித் தொண்டின் […]

யோகிகளில் சிறந்த யோகி!

கிருஷ்ண அமுதம் , அக்டோபர் 2017 – தாய் யசோதை, வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த அறிவாளியாகவோ அல்லது கடினமான யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட அஷ்டாங்க யோகியாகவோ இல்லாமல், சாதாரண ஆயர் குலப் பெண்ணாக இருந்தும், யோகிகளில் எல்லாம் மிகச் சிறந்த யோகியென அவள் கருதப்படுகிறாள். மர உரலோடு சேர்த்து, குழந்தை கிருஷ்ணரை தாய் யசோதை கயிற்றால் கட்டிய நிகழ்ச்சியான தாமோதர லீலா இக்கருத்தை உறுதி செய்கிறது. இந்த தாமோதர லீலா, தீபாவளித் திருநாள் அன்று நிகழ்ந்தது என்று […]

இந்தியர்களுக்கு சாதுக்களை மதிக்கத் தெரியும்!

– ‘கிருஷ்ண அமுதம்’  * ஆகஸ்ட் 2019 – 1977. இஸ்கான் கிருஷ்ண பலராம் ஆலயம்.  விருந்தாவனம். நான் விருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமர் கோயிலில் பூஜாரியாக சேவை செய்து கொண்டிருந்தேன். அச்சமயம் ஸ்ரீலபிரபுபாதாவின் உடல் நலம் மிகவும் குன்றியிருந்ததால் விருந்தாவனத்தில் தொடர்ந்து தங்கியிருந்தார்.  அப்போது ஸ்ரீலபிரபுபாதா, தினமும்   ஒரு சக்கர நாற்காலியில் வந்து  கிருஷ்ண பலராமரை தரிசப்பது வழக்கம்.  தரிசனத்திற்கு பிறகு ஸ்ரீஸ்ரீராதா ஷியாம் சுந்தர் சன்னதி முன்பாக உள்ள திறந்த வெளியில் […]

கஸ்தூரி மான் கற்பிக்கும் பாடம்!

கிருஷ்ண அமுதம் * மே 2017 – மத்திய ஆசியாவில் வாழக்கூடிய மான் இனங்களில் ஒன்று ‘கஸ்தூரி மான்’. அந்த கஸ்தூரி மானின் மடியிலிருக்கும் பையிலிருந்து விலைமதிப்பற்ற வாசனைத் திரவியம் சுரக்கின்றது.  இதற்கு பெயர் தான் ‘கஸ்தூரி’ ஆகும். இந்த திரவம், மிக மிக நறுமண வாசனை பொருந்தியது.  வெகு தொலைவில் இருப்பவர்களால் கூட இதன் நறுமணத்தை உணர முடியும்.  மேலும் கிடைப்பதற்கு மிக அரிதான இந்த கஸ்தூரி திரவம்,  ஏராளமான நறுமணப்பொருட்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இதன் […]

அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் நாராயண நாமம்

கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017 அஜாமிளனின் உயிரை மீட்டுத் தந்த விஷ்ணு தூதர்கள், அவன் உயிரைப் பறித்த யமதூதர்களி டம், பகவான் நாராயணனின் நாமத்தை அஜாமிளன் உச்சரித்ததாலேயே அவனுடைய அனைத்துப் பாவங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் அவன் யமராஜாவின் தண்டனைக்கு உரியவன் அல்ல என்பதையும் ஸ்ரீமத் பாகவதம் பதம் 6.2.7 முதல் பதம் 6.2.19 வரை  பலவகைகளில் உறுதிப்படுத்துகின்றனர். நாம மகிமை அறியாமல் நாராயண நாமம் உச்சரித்த அஜாமிளனின் கோடி பிறவி பாவங்கள் அழிந்தன அஜாமிளன், […]

கலியுக விசேஷம் “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரமே!

கிருஷ்ண அமுதம் * ஏப்ரல் 2017 – நம் காலம் கலி காலம் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலிகாலமாகும். கலி என்றாலே சண்டை சச்சரவுகள்  நிரம்பியது என்று பொருள். கலி காலம் அனைத்துக் கேடுகளும் நிரம்பியதாக உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் தொகுத்தளிக்கும் கலியுகத்தின் கேடுகள் ஸ்ரீமத் பாகவதத்தில் கலி காலத்தின் கேடுகள் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. கலியுகத்தில், மக்கள் அல்ப ஆயுசை உடையவர்களாகவும், சண்டை, சச்சரவு நிரம்பியவர்களாகவும், மந்தமானவர்களாகவும், தவறாக வழிநடத்தப்படுபவர்களாகவும், துரதிர்ஷ்டசாலிகளாகவும், […]

மிகப் பெரிய சொத்து?

கிருஷ்ண அமுதம் * மார்ச் 2017 ஒரு சமயம் ஒரு ஏழை ஒருவர், செல்வத்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டார். ஏழையின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த ஏழைக்கு நீங்காத செல்வத்தை அளிக்க விரும்பினார். எனவே அந்த ஏழை முன்பாக தோன்றிய சிவபெருமான் அவரிடம், “விருந்தாவனத்தில் யமுனை நதிக்கரையில் துவாதச ஆதித்ய குன்றில் சனாதனர் என்ற பெயருடைய சாது ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஒரு  சிந்தாமணி கல்லை வைத்திருக்கிறார். அக்கல் இரும்பை தூய தங்கமாக மாற்றும் வல்லமையுடையது.  […]